Pages

Thursday, August 29, 2013

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் Earth life may have come from Mars

Earth life may have come from Mars 
உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சிளார்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது.

நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்தன என்ற கருத்துக்கு புதிய ஆராய்ச்சிகள் ஆதரவளிக்கின்றன.


உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகளான ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., மற்றும் புரோட்டீன்கள் எப்படி ஒன்று சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியின் விவரங்களை பேராசிரியர் ஸ்டீவன் பென்னெர் எடுத்துரைத்தார்.

உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணமான ஆர்.என்.ஏ.- வை உருவாக்குவதற்கு தேவையான தாதுப்பொருட்கள் செவ்வாய்
கிரகத்தில் நிறைந்துள்ளன. இது பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.

இதனால், செவ்வாய் கிரகத்தில் ஆரம்ப காலத்தில் உருவான உயிர்கள் பின்னர் பூமிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருத்து
இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment