Pages

Monday, October 14, 2013

ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டக்ளஸ், நாக்கு புற்றுநோயால் அவதி oscar actor duclus in tongue cancer

ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் டக்ளஸ், நாக்கு புற்றுநோயால் அவதி

ஆஸ்கார் விருதுபெற்ற ஆலிவுட் நடிகர் டக்ளஸ், நாக்கு புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

பிரபல ஆலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ். 69 வயதான இவர் ஆஸ்கார் விருது பெற்றவர். தற்போது இவரது நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு தொண்டையில் புற்றுநோய் தாக்கி இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே முன்பு வெளியான தகவல் தவறு. எனக்கு தொண்டையில் புற்றுநோய் தாக்கவில்லை. நாக்கில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'வால் ஸ்ரீட்' என்ற பட சூட்டிங்கிற்காக ஐரோப்பா சென்றிருந்தபோது இவரை புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்தது. தற்போது அதற்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post

No comments:

Post a Comment