வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை – மூன்று பெண்கள் கைது! -
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது விபச்சார விடுதி உரிமையாளரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 30, 33 வயதுகளையுடைய கம்புறுபிட்டி, பொலன்னறுவை மற்றும் மஹவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று (13) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Show commentsOpen link

 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment