Pages

Tuesday, September 3, 2013

ஃப்ரீஸர் வாங்க ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்ற அன்னை New york woman sells daughter to buy freezer

அர்ஜெண்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வருபவர், பாப்லா செசரினா மான்சன் அல்டானா (30). அர்ஜெண்டினா வம்சாவழி பெண்ணான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் நோய்வாய்ப்பட்டு சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளதால் தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு வைத்திருந்தார்.

குடும்ப கஷ்டம் அதிகரிக்கவே புத்தி அறிந்த மகள் உடன் இருந்து சம்பாதித்து தந்தால் குடும்ப வருமானம் அதிகரிக்குமே என கருதிய இவர் மகளை மீண்டும் அழைத்து வந்தார்.

இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். படிக்க வேண்டிய வயதில் வேலையில் சேர்ந்தது ஏன்? என மீட்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். அப்போது, 11 வயது சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை திகைக்க வைத்தது.

என் அப்பா ஓடியாடி, வேலை செய்ய முடியாமல் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொண்டு என்னையும் சேர்த்து 4 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட எனது தாயார், என்னை வேலைக்கு அனுப்பினார்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று என் அம்மாவிடம் கேட்டனர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே... என்று என் அம்மா கூறியபோது, பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு, எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர்.

இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து, உதைத்து சித்ரவதை படுத்தினர். மேலும், இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர் என்று அந்த சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, அலுமினியம் கம்பெனி உரிமையாளர்களை கைது செய்து போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் அவரிடம் ஃப்ரீஸரை விற்றுவிட்டு சிறுமியை வாங்கி வந்த தம்பதியர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts