Pages

Friday, August 30, 2013

அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் தொந்தரவு புகார் aravindar ashram harassment complaint against

அரவிந்தர் ஆசிரமம் மீது பாலியல் தொந்தரவு புகார் Pondicherry aravindar ashram harassment complaint against 

 

  புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதியை சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது. புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசிரமத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவு நடக்கிறது,

மனித உரிமைகள் மீறப்படுகிறது, ஆசிரம நிதியில் முறைகேடு நடக்கிறது, ஆசிரம சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களை, புதுவை எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், விஷ்ணு லலித் மற்றும் ஆசிரமத்தில் உள்ள சிலர் எழுப்பியுள்ளனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து, கலெக்டர் விசாரணைக்கு புதுவை மாநில அரசு உத்தரவிட்டது. அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆசிரமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை நீதிபதி சசிதரன் விசாரித்தார். விசாரணையின்போது, ஆசிரமத்தின் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கலெக்டர் விசாரணை செய்வதைத் தான் ஆட்சேபிக்கிறோம் என ஆசிரமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த இருதரப்புக்கும் சம்மதம் தானா என நீதிபதி சசிதரன் கேட்டார். இரு தரப்பிலும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி நியமனத்திற்கு அரசு தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் சர்வ தேச அளவில் புகழ் பெற்றது. ஆசிரமம் குறித்து எழுப்பப்பட்டுள்ள சர்ச்சையால் அதற்குள்ள செல்வாக்கு குறைந்துவிடக் கூடாது. ஆசிரமத்தின் புனிதம் காக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரியாக, கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பி.ஆர்.ராமனை நியமிக்கிறேன்.

ஆசிரமத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீத பாலியல் தொந்தரவு நடந்ததாக கூறப்படும் புகார், ஆசிரமத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு, நிதி முறைகேடுகள், ஆசிரம சொத்துக்கள், சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானதுதானா என விசாரணை செய்ய வேண்டும்.

ஆசிரமத்தில் உள்ள பெண்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய விசாரணை அதிகாரிக்கு உதவியாக பெண் வக்கீல் சத்ய ஸ்ரீபிரியா நியமிக்கப்படுகிறார். விசார ணை அதிகாரியின் முன், தங்கள் குறைகளைக்கூற ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

விசாரணை அதிகாரி முன், வாக்குமூலம் அளிக்க வருபவர்களை தடுக்கக் கூடாது. எந்த முறையில் விசாரணை நடத்துவது என்பதை, நீதிபதி முடிவு செய்யவேண்டும், புகார்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் கலெக்டர் அளிக்க வேண்டும். விரைவில் விசாரணையை முடித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts